logo

A Kind, Smart, & Creative Culture

We believe the camera presents the greatest opportunity to improve the way people live and communicate.

Leaders on Culture at Snap

Hear from our leadership on what it's like to work at Snap, Inc. and how we live our values of kind, smart, and creative every day.

Snap 12 வருடங்கள்

Snap -இன் 12வது ஆண்டுவிழாவை நாங்கள் கொண்டாடினோம்! Snap -இன் மற்றொரு ஆண்டுவிழாவை கௌரவிக்க, Snap ஏன் அனைவருக்குமான சிறந்த இடம் என்பதை தனிப்படுத்திக் காட்டினோம் — எங்களது கனிவான, புத்திசாலித்தனமான மற்றும் ஆக்கப்பூர்வ கலாச்சாரம்.  Snap இல் பணிபுரிவதை குழு உறுப்பினர்கள் ஏன் விரும்புகிறார்கள், நாங்கள் ஏன் தனித்து நிற்கிறோம் மற்றும் எங்கள் நிறுவன கலாச்சாரத்தைக் கைப்பற்ற அவர்கள் எந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் என்பது குறித்து உலகளாவிய எங்கள் குழு உறுப்பினர்கள் சொல்வதைக் கேளுங்கள்.

Snap கவுன்சில்

கவுன்சில் என்பது கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஆழமாகக் கேட்கவும், இதயத்திலிருந்து பேசவும் மக்கள் ஒன்றுகூடும் நடைமுறையாகும். குழு உறுப்பினர்கள் இடையூறு இல்லாமல் பேசுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர், இது அனைவருக்கும் கேட்கும் வாய்ப்பை உறுதி செய்கிறது. கதைகள் பகிரப்படும்போது, மற்றவர்கள் முழு மனதுடன் கேட்கிறார்கள். இது ஒரு உள்ளடக்கிய பணிச்சூழலை வளர்க்கிறது, அங்கு மக்கள் தாங்கள் இந்த பணிசூழலுக்கு உரியவர்கள் என்ற உணர்வை அனுபவிக்கிறார்கள்.

நாங்கள் சிக்கலான பிரச்சனைகளை தீர்க்கும் உலகளாவிய நிறுவனமாக இருக்கிறோம் - எனவே ஒவ்வொரு குரலையும் உரையாடலுக்கு அழைப்பது மற்றும் ஒருவரையொருவர் ஆழ்ந்து கேட்பதும் அவசியம்.

CitizenSnap

எங்களின் இலக்கு மக்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கும், அக்கணத்தில் வாழ்வதற்கும், உலகைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், ஒன்றாக இணைந்து மகிழ்ந்திருப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதின் மூலம் மனித முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதாகும்.

எங்கள் நான்காவது வருடாந்திர CitizenSnap அறிக்கை, எங்களது சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) இலக்குகளை நோக்கி Snap-இன் முன்னேற்றத்தை மட்டுமல்லாமல், தொடர்ந்து மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதியையும் வெளிப்படுத்துகிறது. எங்கள் இலக்குகளை நாங்கள் முன்னெடுத்துச் செல்லும்போது, Snap நிறுவனம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு எப்போதும் புதிய மற்றும் அதிக வாய்ப்புக்கள் இருக்கும் என்பதை நாங்கள் உணர்கிறோம்.

இந்தப் பணி எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

Snap -இன் தொடக்க வளர்ச்சி தினம்

Snap -இன் தொடக்க வளர்ச்சி தினத்திற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நூறுக்கணக்கான Snap Inc. குழு உறுப்பினர்கள் ஒன்று கூடினார்கள் — தங்கள் தொழில் வாழ்க்கையை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தேவையான கற்றல்கள் மற்றும் கருவிகளுடன் திரும்பிச் சென்றார்கள்.

SnapNoir @ Afrotech

எங்களின் ERG SnapNoir, ஆஸ்டின், TX -இல் உள்ள Afrotech-இல் பங்கேற்றார். படைப்பாளர் மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவித்து வளர்ப்பதற்கும், AR-இல் எங்கள் தலைமைத்துவ நிலையை உறுதிப்படுத்துவதற்கும், குறைவான பிரதிநிதித்துவம் உள்ள சந்தைகளில் எங்கள் பிராண்டு பொருத்தத்தை அதிகரிப்பதற்கும் நாங்கள் அலுவலகத்தில் ஒரு நிகழ்வை நடத்தினோம்.

எங்களின் Snap Stars மற்றும் Snap Lens Network முன்னிலைப்படுத்தும் வகையில், 21 படைப்பாளர்கள் மற்றும் 28 லென்ஸ் டெவலப்பர்கள் உள்ளிட்ட 165-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் Snap Inc. நிறுவனத்தின் Snapchat தயாரிப்பை பற்றியும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டியில் நாங்கள் ஏன் முன்னணியில் இருக்கிறோம் என்பதையும் அறிந்து, மகிழ்ந்து, அவற்றில் தங்களை மேலும் பரிச்சயப்படுத்திக் கொண்டார்கள்.