Be Yourself, Every Day
Read about our public commitment to diversity, equity, and inclusion in our 2024 Diversity Annual Report.

பன்முகத்தன்மை, சமநிலை, உள்ளடக்குதல்
நாம் அடுத்தவர் கண்ணோட்டத்தில் இருந்து இவ்வுலகை பார்க்கும்போது, DEI ஏன் அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்வோம் என்று நாங்கள் நம்புகிறோம். அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்குவதில் நடவடிக்கை எடுக்கவும் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்யவும் நாங்கள் ஊக்கம்பெற்றுள்ளோம்.
Employee Resource Groups

பணியாளர் வள குழுக்கள்
எங்கள் பணியாளர் வளக் குழுக்கள் Snap Inc. குடும்ப உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படுகின்றன. ஒரு பொதுவான காரணத்தைக் கொண்டாடவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாதிடுவதை ஊக்குவிக்கவும், ஆட்சேர்ப்புக்கான எங்கள் அணுகுமுறையைச் செம்மைப்படுத்தவும் அவை ஒன்று சேர எங்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன.
அவர்கள் சமூக நிகழ்வுகளை நடத்தினாலும், விருந்தினர் பேச்சாளர்களை ஹோஸ்டிங் செய்தாலும்அல்லது புதிய தன்னார்வ முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றாலும், எங்களின் பணியாளர் வளக் குழுக்கள் எப்போதும் உண்மையான மாற்றம் மற்றும் உண்மையான நண்பர்களை ஏற்படுத்த உழைக்கின்றன!

SnapAbility
SnapAbility என்பது குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள், பாதுகாவலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போன்ற நபர்களாக அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு சமூகமாகும். மன மற்றும் உடல் குறைபாடுகள் மற்றும் மாறுபட்ட உடல்ரீதியான வேறுபாடுகளைச் சுற்றி ஒத்துணர்வு, மரியாதை மற்றும் கருணை ஆகியவற்றை மேம்படுத்தி எங்கள் திறன்களின் மூலம் ஒருவருக்கொருவர் அதிகாரம் அளிக்க சமூகத்தில் ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் தயாரிப்புகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் எவ்வாறு அணுகும்வகையில் இருக்கின்றன என்பதை கவனத்தில் கொண்டு, எங்கள் பயனர்களுக்கு ஒத்துணர்வை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

SnapAsia
SnapAsia ஆசிய மற்றும் பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்தவர்களை தங்கள் அனுபவங்களையும் சவால்களையும் பகிர்ந்து கொள்ளவும், கலாச்சார புரிதலை மேம்படுத்தவும் மற்றும் ஆசிய கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தவும் ஒன்றிணைக்கிறது. SnapAsia சமூக உறுப்பினர்களுக்கு Snap-ல் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக முன்னேறுவதற்கான உண்மையான அரவணைப்பை வழங்குவதையும், ஊக்கப்படுத்துவதையும் ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

SnapFamilia
SnapFamilia ஹிஸ்பானிக் மற்றும் லத்தீன்/é சமூகங்களை உருவாக்கும் தனித்துவமான பன்முகத்தன்மைக்கு
அதிகாரமளிக்கிறது, உயர்த்துகிறது மற்றும் கொண்டாடுகிறது.

SnapHabibi
மத அல்லது அரசியல் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் தென்மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவின் சமூக மற்றும் தார்மீக கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், தொழில்முறை மற்றும் அறிவுசார் வளர்ச்சியில் ஒருவரையொருவர் தூண்டுவதற்கும், பரந்த தென்மேற்கு ஆசியர்ககளிடமும் மற்றும் வட ஆப்பிரிக்கர்களிடமும் கற்றுக்கொண்டு சேவை செய்வதற்கும் - தொழில்முறை சமூகத்தில் SnapHabibi அதன் உறுப்பினர்களை ஒன்றிணைக்கிறது. எனவே நாம் ஸ்னாப்சாட் மூலம் மனித முன்னேற்றத்தை உள்ளடக்கிய மற்றும் அதிகாரமளிக்கும் விதத்தில் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

SnapNoir
SnapNoir, Snap இல் உள்ள ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் மற்றும் கூட்டாளிகளை ஒன்றிணைத்து, ஒற்றுமையான மற்றும் பாதுகாப்பான இடத்தை உருவாக்குகிறது. Snap இலும் சமூகத்திலும் ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தவர்களுக்கான கலாச்சார புரிதல், பன்முகத்தன்மை மற்றும் சமூக தாக்கத்தை பேணுவதற்கான ஒரு மன்றத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

SnapParents
SnapParents ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவது, வேலை/வாழ்க்கை சமநிலை மற்றும் சுய பராமரிப்பை ஊக்குவித்தல் மற்றும் உழைக்கும் பெற்றோரின் தனித்துவமான சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுதல் ஆகியவற்றின் மூலம் அனைத்து பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறது.

SnapPride
SnapPride பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு, பாலினப் பண்பு மற்றும் பாலியல் அடையாளத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது. எந்தவொரு LGBTQIA2S+ அனுபவத்திலும் வசிக்கும் குழு உறுப்பினர்களுக்கு நாங்கள் சமூகத்தைக் நடத்துகிறோம், மேலும் ஆதரவுக் கூட்டாளிகளை வரவேற்கிறோம். LGBTQIA2S+ அடையாளத்தை மையப்படுத்தவும், டிரான்ஸ் மற்றும் QBIPOC கருத்துக்களை மேலுயர்த்தவும், கியூயரை மையாமாகக் கொண்டுள்ள முயற்சிகள் மூலம் புரிதலையும் விழிப்புணர்வையும் அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

SnapShalom
SnapShalom என்பது Snap இல் உள்ள யூத குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி யூத பாரம்பரியத்தை கொண்டாடுவதற்கும், Snap-க்கு உள்ளேயும் வெளியேயும் எங்கள் சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்கும் ஆலோசனை வழங்கவும் ஒரு இடமாகும்.

SnapVets
பகிரப்பட்ட அனுபவங்கள், தன்னார்வச் செயல்பாடுகள், ஆட்சேர்ப்பு நிகழ்வுகள், தொழில்முறை மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் நீண்ட காலத் தக்கவைப்பு ஆகியவற்றின் மூலம் ஒருவரையொருவர் ஆதரித்து ஊக்குவிக்கும் ராணுவ வீரர்கள், படைப் பிரிவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளின் பெருமைமிக்க உலகளாவிய எங்களின் சமூகத்தை SnapVets தீவிரமாக ஈடுபடுத்துகிறது. எங்களின் ERGயின் பணியின் மூலம் எங்கள் வலுவான சேவை மதிப்பைத் தொடரவும், Snap-ஐ சாதகமாகப் பிரதிநிதித்துவப்படுத்துவோம் என்றும் நம்புகிறோம்.

SnapWomen
SnapWomen Snap-இல் பெண்களை ஆதரிக்கிறது, அவர்களுக்கு அதிகாரமளிக்கிறது மற்றும் முன்னேற்றுகிறது. அதாவது பட்டறைகள், தேவையில் இருக்கும் பெண்களை அணுகுதல் மற்றும் பெண்கள் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய Snap சமூகத்தை ஒன்றிணைத்தல் என்பதாகும்.
எங்கள் கூட்டாளர்கள்








Snapஇல் வாழ்க்கை
Snap குழுவில் சேரத் தயாரா?